முகப்பு செய்திகள் இந்தியா ஐ.நா.,வுக்கு கொரோனா தடுப்பூசி; இந்தியாவுக்கு நன்றி!

ஐ.நா.,வுக்கு கொரோனா தடுப்பூசி; இந்தியாவுக்கு நன்றி!

ஐ.நா.,வின் அமைதிப் படையினருக்காக, கொரோனா தடுப்பூசியை இலவசமாக கொடுத்த இந்தியாவுக்கு நன்றி என  ஐ.நா., பொதுச் செயலர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், கொரோனா வைரசுக்கான தடுப்பூசி மருந்தை, மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, இதர நாடுகளுக்கும், தடுப்பூசிகளை வழங்கி, உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

சமீபத்தில், ஐ.நா.,வின் அமைதிப் படையினருக்காக, தடுப்பூசிகள், இலவசமாக வழங்கப்பட்ட நிலையில், இந்த உதவிக்கு, ஐ.நா., பொதுச்செயலர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்திர துாதர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அமைதிப் படையினருக்காக, இரண்டு லட்சம் கொரோனா தடுப்பூசி, ‘டோஸ்’களை வழங்கியதற்கு, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ், நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பிவைத்தார்.


அதில், உலக அளவில், கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில், இந்தியா தலைமைத் துவத்துடன் இருப்பதை, குட்டரெஸ் குறிப்பிட்டார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments

hdhub4u