முகப்புஅரசியல்டவ் -தே புயல் பாதிப்பு: குஜராத்திற்கு 1000 கோடி ஒதுக்கீடு; பிரதமர் மோடி!

டவ் -தே புயல் பாதிப்பு: குஜராத்திற்கு 1000 கோடி ஒதுக்கீடு; பிரதமர் மோடி!

டவ் – தே புயல் பாதிப்பால் ஏற்பட்ட குஜராத்திற்கு, ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

குஜராத்தை ஒட்டிய கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த டவ்தே புயல், நேற்று முன்தினம் நள்ளிரவு கரையை கடந்தது. இந்தப் புயலால் 22 பேர் உயிரிழந்த நிலையில், 51 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் ஆகியவை முறிந்து விழுந்துள்ளன. குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டார்கள்.

இந்நிலையில், டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி, ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியும் உடன் இருந்தார்.

ஆய்வுக்குப் பின்னர் நடத்தப்பட்ட ஆலோசனையை அடுத்து, குஜராத் மாநிலத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக அளிக்கும் என அறிவித்தார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Recent Comments

hdhub4u