முகப்பு அரசியல் தமிழகம்: 11 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு ஒத்தி வைப்பு!

தமிழகம்: 11 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு ஒத்தி வைப்பு!

கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக இதுவரை சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததால், உச்ச நீதிமன்றம் தலையிட்டு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களையும் தகுதிநீக்கம் செய்யக்கோரி அளிக்கப்பட்ட புகார்மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும், இதுவரையிலும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது சட்டத்திற்குப் புறம்பானது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மணிப்பூர் எம்எல்ஏக்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் அரசுக்கு எதிராக வாக்களித்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் உத்தரவிடப்பட்டது. ஆனால் அரசியல் சாசனப்பிரிவு 14ன் படி சபாநாயகர் தனது கடைமையைச் செய்யவில்லை.

மேலும், தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டிய எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத்தால், அணிமாறிய ஐந்து எம்எல்ஏக்களை சட்டசபைக்குள் செல்ல மணிப்பூர் உயர் நீதிமன்றம் தற்போது தடை விதித்துள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு 11 எம்எல்ஏக்களை வழக்கிலும் உச்ச நீதிமன்றம் இடைக் கால உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் கோரிக்கை வைத்தார்.

அதன்பின்னர் ஒத்திவைக்கப்பட்ட வழக்கு, இன்று உச்ச நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்ய சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் மேலும் கால அவகாசம் கோரினர். இதனைத் தொடர்ந்து வழக்கு மேலும் நான்கு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

கிரிக்கெட்: ஆஸ்திரேலியா செல்லும் ரோஹித்!

பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஹிட்மேன் ரோஹித் சர்மா தனது உடல் தகுதியை நிரூபித்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில்...

கிரிக்கெட்: நடராஜனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வெற்றிகள் மேலும் மேலும் குறைய வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3வது...

தென் மாவட்டங்களுக்கு கனமழை!

புரவி புயல் காரணமாக நாளை மாலை வரை தென் மாவட்டங்களான குமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய...

புரவி புயல்: முதல்வருடன் பிரதமர் பேச்சு!

புரவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இரு மாநில முதல்வரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் விவரம் கேட்டறிந்தார் வங்கக்கடலில்...

Recent Comments

hdhub4u