முகப்பு செய்திகள் இந்தியா இந்திய பணக்காரர்கள் பட்டியல்: மூன்றாவது இடத்தை பிடித்த ஷிவ்நாடார்!

இந்திய பணக்காரர்கள் பட்டியல்: மூன்றாவது இடத்தை பிடித்த ஷிவ்நாடார்!

இந்திய பணக்காரர்கள் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

உலகிலேயே அதிக பில்லினியர்களை கொண்ட மூன்றாவது நாடு இந்தியா என போர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. மொத்தம் இந்தியாவில் 140 பில்லினியர்கள் உள்ளனர்.

போபர்ஸ் பத்திரிகை நிறுவனம் உலகின் செல்வந்தர்களின் பட்டியலை 35வது ஆண்டாக வெளியிட்டுள்ளது. அதில் ஆசிய அளவில் முதல் செல்வந்தராக முகேஷ் அம்பானி உள்ளார். 

முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 84.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். கடந்த ஆண்டு ஆசிய அளவில் முதல் செல்வந்தராக இருந்த சீனாவின் ஜாக் மாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்திருந்தார் முகேஷ் அம்பானி.

அதுமட்டுமல்லாது உலகின் டாப் 10 பில்லினியர்கள் பட்டியலில் அம்பானி பத்தாவது இடத்தை பிடித்துள்ளார். 

இப்பட்டியலில், அதானி குழும தலைவர் கவுதம் அதானி 50.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உலக பில்லினியர்கள் பட்டியலில் 24வது இடத்தில் உள்ளார். ஷிவ் நாடார் 23.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 71வது இடத்திலும் உள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments

hdhub4u