முகப்பு அரசியல் முதல்வர் தொகுதியில் வாக்குப் பதிவு அதிகம்!

முதல்வர் தொகுதியில் வாக்குப் பதிவு அதிகம்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தொகுதியில் அதிகமாக வாக்குகள் பதிவாகி உள்ளன.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. காலையில் 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 7 மணிக்கு நிறைவடைந்தது. தமிழகத்தில் திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாக்குகளை பதிவுசெய்தனர்.

சைக்கிளில் வந்த விஜய், ரசிகரின் செல்போனை பறித்த அஜித், நடந்து வந்து வாக்குப்பதிவு செய்த விக்ரம், காத்திருந்து வாக்களித்த சூர்யா, கார்த்திக், சிவக்குமார் என சினிமா நட்சத்திரங்கள் வைரலாகினர்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை. இதனை தொடர்ந்து வாக்கு இயந்திரங்களை சீல் வைக்கும் பணிகள் நடந்துமுடிந்தது. இந்நிலையில் இன்றைய தினம் தமிழகத்தில் பதிவாகியுள்ள மொத்த வாக்குப்பதிவு விவரத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.

அதில் தமிழக சட்டமன்ற தேர்தலில் 72.78% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

அதில், பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் அதிகபட்ச வாக்குப் பதிவாகியுள்ளது. மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் குறைந்தபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளது. எடப்பாடி தொகுதியில் 85.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments

hdhub4u